வீரபாண்டி: வீரபாண்டி, இனாம் பைரோஜி, பிச்சம்பாளையம், திருமணிமுத்தாற்றின் கரையிலுள்ள, கோமுட்டி முனியப்பன், பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. அதன் முதலாமாண்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி, பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலிலிருந்து, திரளான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமி சிலைகளுக்கு அபி?ஷகம் செய்தனர். முனியப்பன், பெரியாண்டவர் சுவாமிகள், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.