வாலாஜாபேட்டை: உலக மக்கள் துன்பங்கள் விலக, உடல், மன நோய் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று, (ஜன., 31ல்) தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி ஓம அபிஷேகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் நடத்தினார். இதில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்றார்.