மதுரை:மதுரை புதூர் தூய லூர்து அன்னை சர்ச் ஆண்டு பெரு விழாவை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடி ஏற்றி துவக்கினார்.
பின் மரியாள் காட்டிய புனிதம் என்ற தலைப்பில் பேராயர் பேசினார். இன்று (பிப்., 2) முதல் பிப்., 10 வரை தினமும் நவநாள் திருப்பலி காலையிலும், மாலையிலும் நடக்கிறது. பிப்., 8 நற்கருணை பவனி நடக்கிறது. பிப்., 9 தக்கலை மறை மாவட்ட ஆயர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்து, பின் அன்னையின் தேர்ப்பவனி நடக்கும். பிப்., 10 பொங்கல் திருவிழா நடக்கிறது.
பங்குதந்தை தாஸ் கென்னடி, உதவி பங்கு தந்தையர்கள் மார்சன் லிங்கன், பிரபின் சூசைஅடிமை, அமலஆஸ்வின் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.