Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சித்தால் முன்னேற்றம் தான்!  மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதகமான காலம் வரட்டும் காத்திருப்போம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ராகு சுமார் தான் குரு பார்வை சூப்பர்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
16:53

ராகு ராசிக்கு 2ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் குடும்பத்தில்  பிரச்னை, தொலைதூர பயணம் ஏற்படுத்துவார். பொருளாதார இழப்பு ஏற்படும். கேது  8ம் இடமான தனுசுராசிக்கு மாறுவதும் சிறப்பானதல்ல. உடல் உபாதை ஏற்படலாம். வீண்பயம், செயல்முடக்கம் வரலாம்.

ராகு, கேதுவால் சுமாரான பலன்களே ஏற்பட்டாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம் குரு சாதகமாக நின்று நற்பலன்களைத் தருவார். குருபகவான் தற்போது 7ம் இடத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர் பலவிதத்தில் வெற்றி தந்து பொருளாதாரத்தில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். 8ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் முயற்சியில் தடைகளை உருவாக்குவார். மொத்தத்தில் ராகுவின் நிலை சுமார் என்றாலும் குருவின் பார்வை சிறப்பாக உள்ளதால் நன்மை உண்டாகும்.

2019 பிப்ரவரி – அக்டோபர்

விட்டுக் கொடுக்கும் மனம் இருந்தால் மகிழ்ச்சிக்கு  குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே  அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம்.  குருவால் சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.


பணியாளர்களுக்கு  கடந்த காலத்தைப் போல அனுகூலம் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வேலைப்பளு குறையும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.  

வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வர்.  சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் விடாமுயற்சியால் கிடைக்கும்.


அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.


மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். ஆசிரியரிடம் மதிப்பு, மரியாதை உயரும். போட்டிகளில் வெற்றி காணலாம். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு.


விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும்.


பெண்கள் குதூகலமான வாழ்வைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு பெறுவர். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.


2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் 26க்குப் பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். 2020 மார்ச் 26க்கு பிறகு குரு பதவி உயர்வை தருவார். சக  ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  

வியாபார வளர்ச்சிக்கு பெண்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தி லாபத்தை அதிகரிக்க செய்யலாம். 2020 மார்ச் 26 க்கு பிறகு வாடிக்கையாளர்கள்  மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர்.

மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். 2020 மார்ச்26 க்கு பிறகு குருபலத்தால் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.


விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது.  2020 மார்ச் 26க்கு பிறகு கால்நடை வளர்ப்பால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். 


பெண்களுக்கு உறவினர் மத்தியில் செல்வாக்கு குறையலாம். 2020 மார்ச் 26க்கு பிறகு நிலைமை  சீராகும்.  கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.  


பரிகாரம்:
* வெள்ளியன்று ராகுவுக்கு பால் அபிஷேகம்
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
* சனியன்று பெருமாளுக்கு நெய்தீபம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (13.2.2019 முதல் 13.8.2020 வரை) »
temple
ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன் தருவர்.  காரணம் ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
ராகு  உங்கள் ராசிக்கு பெயர்ச்சியடைவது சுமாரான நிலை தான். இனி முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். ... மேலும்
 
temple
ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் ... மேலும்
 
temple
ராகு  ராசிக்கு 11ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான இடம். அவரால் இதுவரை ஏற்பட்ட பிரச்னை இனி ... மேலும்
 
temple
ராகு 10ம் இடமான மிதுனராசிக்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.