மானாமதுரை:அம்மன் கோவில்களில் நடைபெறும் பொங்கல் பூஜை விழாவின் போது நடக்கும் தீச்சட்டி எடுத்தல் விழாவிற்காகமானாமதுரையில் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மானாமதுரையில் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இங்குள்ள குலாலர் தெருவில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்துவருகின்றனர். மாசி,பங்குனி, சித்திரையில் பெரும்பாலான அம்மன் கோவில் களில்பொங்கல் பூஜை விழா நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி மற்றும் ஆயிரங்கண் பானை எடுத்து வந்துதங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு செல்வர்.
புகழ்பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன்,காரைக்குடி கொப்புடை அம்மன், விருதுநகர், இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, திருச்சுழி,திண்டுக்கல் ஆகிய ஊர்களில்உள்ள மாரியம்மன் கோவில்களில் தீச்சட்டி திருவிழா பிரசித்திபெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது.இந்த விழாக்களுக்காக தற்போது மானாமதுரையில்மண்ணால் ஆன தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்துமண்பாண்ட தொழிலாளி வேலு 65, கூறியதாவது: தாயமங்கலம், காரைக்குடி, இருக்கன்குடி ஆகியஊர்களில் நடைபெறும் விழாவிற்காக வியாபாரிகள் தீச்சட்டிகளுக்கு ஆர்டர்கள்கொடுத்துள்ளனர்.
மானாமதுரையில் தயாராகும் சட்டிகளில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டுஅதற்கு வர்ணம் பூசி தரமாக வழங்குவதால் இங்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இங்கு விற்கப்படும் தீச்சட்டிகள் மற்றும் ஆயிரங்கண் பானைகள் விலை குறைவாக இருப்பதினால் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர், என்றார்.