விநாயகருக்கு ஒரு பிரதட்சிணம், சூரியனுக்கு இரண்டு பிரதட்சிணம், பரமேஸ்வரன் அம்பாளுக்கு மூன்று பிரதட்சிணம், மஹாவிஷ்ணு, லக்ஷ்மி, மஹான்களின் சமாதிகளுக்கு நான்கு பிரதட்சிணம், அரச மரத்துக்கு ஏழு பிரதட்சிணம் செய்து வணங்க வேண்டும். பிரதட்சிணம் செய்யும்போது நிதானமாக, அடிமேல் அடி வைத்து கைகளைக் கூப்பியபடி சுவாமி ஸ்தோத்திரங்களைச் சொல்லி வலம் வர வேண்டும்.