பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு அனுமன் முகம் கிழக்கு நோக்கியிருக்கும். இந்த முகத்திற்கு வாழைப்பழமும், கொண்டைக்கடலையும், தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகமும், நீர்மோரும், மேற்கு நோக்கிய கருடமுகத்திற்கு தேனும், வடக்குப் பார்த்த வாரகமுகத்திற்கு சர்க்கரைப் பொங்கல், வடையும் படைக்க வேண்டும். மேல் நோக்கிய ஹயக்ரீவர் முகத்துக்கு தனியே படையல் அவசியமில்லை.