பதிவு செய்த நாள்
08
பிப்
2019
12:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றிலும், நடைபாதைக்கு கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்தது. நகரில் உள்ள பிரதான கோவிலுக்கு வரும், பக்தர்களின் வசதிக்காக, மத்திய அரசு, 19.99 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இதில், காஞ்சிபுரம் ஏகாம்பரர், வரதராஜர், காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும், பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, சாலை வசதி, மழை நீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதில், வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதிகளில், இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு, தடுப்பு கற்களில் துருப்பிடிக்காத உருளை கம்பிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், நடைபாதைக்கு கிரானைட் கற்கள் பதிக்கும் பணி துவங்கி, நடந்து வருகிறது. இப்பணி ஒரு வாரத்திற்குள் முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.