Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம். ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அந்தஸ்து உயரும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1) சுக்கிரனால் நன்மை
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1) சுக்கிரனால் நன்மை

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
12:02

நம்பியவரை வாழ வைக்கும் தனுசு ராசி நேயர்களே!  

சூரியன் 3ம் இடத்திற்கு செல்வதால் நன்மை தரக் காத்திருக்கிறார். சுக்கிரன் பிப்.25ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். இப்போது ராகு 7ம் இடமான மிதுன ராசிக்கு மாறியுள்ளார். இடப்பெயர்ச்சி, தீயோர் சேர்க்கை, அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேது உங்கள் ராசியில் இருப்பதும் சிறப்பானதல்ல. செயலில் தடை, உடல் உபாதை தரலாம்.

குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமற்ற நிலையாக இருந்தாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை உண்டாகும்.  

குடும்பத்தில் சுக்கிரனால் நன்மையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பெண்களால் நன்மை காண்பீர்கள். அவர்களால் பொன், பொருள் சேரும். பிப்.24,25ல் உறவினர் வருகையும், அவர்களால் உதவியும் கிடைக்கும். ஆனால் மார்ச் 8,9ல் உற்றார் உறவினர் வகையில் பிரச்னை வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்.28, மார்ச் 1,2ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள்  ஆதரவுடன் இருப்பர்.

அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்பு கிடைக்காமல் போகலாம்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சுக்கிரனால் நல்ல முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.  கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சிலருக்கு பதவி தேடி வரும்.   பிப்.25க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பிப்.22,23ல் எதிர்பாராத  நன்மையை எதிர்பார்க்கலாம்.  பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.  குருவால் ஏற்பட்ட  தொல்லை, வருத்தம், வீண் அலைச்சல் முதலியன மார்ச் 13க்கு பிறகு மறையும்.

வியாபாரத்தில் சூரியனால் லாபம் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் பொருளாதாரம் உயரும். வெளியூர் பயணம் வெற்றியில் முடியும். புதனால் பகைவர் தொல்லை வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பிப்.26,27, மார்ச் 3,4ல் சிறுதடைகள் குறுக்கிடலாம். பிப்.12,13, மார்ச் 12,13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பிப்.25க்கு பிறகு வியாபாரத்தில் தொட்டது பொன்னாகும் நிலை ஏற்படும். மார்ச்13க்கு பிறகு உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

கலைஞர்கள் புகழோடும், பாராட்டோடும் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிப்.25க்கு பிறகு  அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் செல்வாக்குக்கு குறைவிருக்காது. மார்ச் 10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்  சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால் சிறப்பான பலன் காணலாம். போட்டிகளில் வெற்றி உண்டாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது
விவசாயிகள் போதிய மகசூலைப் பெறுவர். அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். கால்நடை மூலம் வருமானம் உயரும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெற்று மகிழ்வர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மார்ச் 5,6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிப்.15,16ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 13க்கு பிறகு குருபார்வையால் திருமணம் கைகூட வாயப்புண்டு.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள்
ஆதரவுடன் இருப்பர்.  செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.

* நல்ல நாள்: பிப்.13,14,15,16,22,23,24,25,28, மார்ச் 1,2,5,6,7,12,13,14
* கவன நாள்: பிப்.17,18 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:2,3
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்
*  வெள்ளிக்கிழமையில் மாரியம்மன் தரிசனம்

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar