Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கேதுவால் யோகம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அந்தஸ்து உயரும்
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அந்தஸ்து உயரும்

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
12:02

மனதில் பட்டதை சொல்லும் மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25ல் இருந்து சாதக இடமான உங்கள் ராசிக்கு வருகிறார். குரு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். ராகு 6-ம் இடமான மிதுன ராசிக்கு வந்துள்ளதால் பிரச்னை மறையும். தீயோர் சேர்க்கையில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலம் ஏற்படும்.  கேது ராசிக்கு 12-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது சிறப்பான இடம் அல்ல. ஆனால் பிற்போக்கான நிகழ்வுகள் வராது. உடல் உபாதைகள் குறுக்கிடலாம்.

குருவால் பொருளாதாரம் மேம்படும். சில பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். குருபகவான் மார்ச் 13ல் அதிசாரம் பெற்று 12ம் இடத்திற்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலையே.

குடும்பத்தில் குருவால் சமூக அந்தஸ்து உயரும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக மார்ச் 3,4ல் அவர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரனால் பிப்.25க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். பிப்.26,27ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆனால் மார்ச் 10,11ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். புதனால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் குருவால் வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்.25க்கு பிறகு பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர்.  பிப்.26,27ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வியாபாரத்தில் போதிய வருமானம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறு தலைதுாக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சூரியனால் ஏற்பட்ட வீண்அலைச்சல்,  சோர்வு முதலியன  மறையும். சுக்கிரனால் பிப்.25க்கு பிறகு பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பிப்.28,மார்ச் 1,2,5,6,7ல்  தடைகள் வரலாம்.  பிப்.15,16ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.   செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்களுக்கு போதிய வருமானம் இருந்தாலும் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது பிப்.25க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலன் பெறுவர்.  பிப்.12,13, மார்ச் 12,13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆனாலும் புதன் சாதகமற்று இருப்பதால் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மஞ்சள், நெல், கரும்பு, எள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காணலாம்.

புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் போகும். வம்பு, வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் பிப்.25க்கு பிறகு உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்பம்  சிறக்கும். குருவால் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மார்ச் 8,9ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். பிப்.17,18ல் விருந்து விழா என செல்வீர்கள். உடல்நிலையில் லேசான பாதிப்பு வரலாம். சிகிச்சையும் தேவைப்படலாம்.

* நல்ல நாள்: பிப்.15,16,17,18,24,25,26,27 மார்ச் 3,4,8,9
* கவன நாள்: பிப்.19,20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: நீலம்,மஞ்சள்   

* பரிகாரம்:
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
*  தேய்பிறை சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு
*  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar