Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) குழந்தை பாக்கியம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1) சுக்கிரனால் நன்மை தனுசு: (மூலம், பூராடம், உத்தராடம் 1) ...
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம். கேட்டை) எதிர்பாராத ஆதாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
12:40

நேர்த்தியுடன் செயலாற்றி வரும் விருச்சிக ராசி நேயர்களே!

இந்த மாதம் செவ்வாய், புதன் நற்பலன் தரக் காத்திருக்கின்றனர். சுக்கிரன் பிப்.25ல் இடம் மாறினாலும் தொடர்ந்து சாதகமான இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் சிறக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.

இப்போது ராகு 8ம் இடமான மிதுன ராசியில் இருப்பது  சிறப்பான இடம் அல்ல. உறவினர் வகையில்  பிரச்னை அவ்வப்போது குறுக்கிடலாம். முயற்சியில் தடைகள் ஏற்பட்டு மறையும். கேது 2ம் இடமான தனுசு ராசிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது.  அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

குடும்ப வாழ்வில் குதுாகலம் நீடிக்கும். தம்பதியர் இடையே இணக்கம் அதிகரிக்கும். பிப்.16,17ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அப்போது சற்று விலகி இருக்கவும். ஆனால் மார்ச் 3,4 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 8,9ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.25க்கு பிறகு பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 13க்கு பிறகு குருவால் பணப் புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க வாய்ப்புண்டு.

அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை பிப்.25க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி தேடி வர வாய்ப்புண்டு. தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் பணியில் திருப்தி காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சலுகைக்கு தடையிருக்காது. பிப்.19,20,21ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

வியாபாரிகள் தொழில்ரீதியாக வெளியூர் சென்று லாபத்துடன் திரும்புவர். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவர்.   இந்த மாதம் பெண்கள் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். ஒதுங்கி இருக்கவும். பிப்.24,25,28, மார்ச் 1,2ல் சந்திரனால் விரயம் ஏற்படலாம். மார்ச்10,11ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். மறைமுகப்போட்டி, தடைகள், பகைவர் தொல்லை முதலியன மறையும். ஆனால் பிப். 25க்கு பிறகு வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.

கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் பெறுவர். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். தலைமையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்.  மார்ச் 8,9ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர்.   

விவசாயிகளுக்கு பழங்கள், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.   

பெண்களுக்கு குடும்பத் தேவைகள் குறையின்றி பூர்த்தியாகும். சொந்தபந்தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் செல்வாக்கு  உயரும். உறவினர்களுடன் புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்புண்டு. சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர். தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பிப்.13,14, மார்ச் 12,13,14ல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

* நல்ல நாள்: பிப்.13,14,19,20,21,22,23,26,27,மார்ச் 3,4,10,11,12,13,14  
* கவன நாள்: பிப்.15,16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
*  சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
*  திங்களன்று சிவனுக்கு வில்வ மாலை
*  பவுர்ணமியில் விரதமிருந்து கிரி வலம்

 
மேலும் பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!

சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். ... மேலும்
 
temple
கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.