பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
* பிப்.9 தை 26: ஹரதத்த சிவாச்சாரியார் குருபூஜை, முகுந்த சதுர்த்தி, வரசதுர்த்தி, வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி பவனி, திருமயம் ஆண்டாள் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல், திருநள்ளாறு சனீஸ்வரன் ஆராதனை.
*பிப்.10 தை 27: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், கலிக்கம்ப நாயனார் குருபூஜை, நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப்பெருமாள் வருஷாபிஷேகம், திருச்செந்தூர் முருகன், காஞ்சிபுரம் காமாட்சி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர், மதுரை கூடலழகர், இம்மையில் நன்மை தருவார், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்.
* பிப்.11 தை 28: நமச்சிவாய மூர்த்தி குருபூஜை, திருச்செந்தூர் முருகன் சிங்க கேடயச்சப்பரம், மதுரை கூடலழகர் ஆண்டாள் கோலம், ஸ்ரீரங்கம் பெருமாள் கருடசேவை, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் தோளுக்கினியானில் பவனி, கும்பகோணம் சக்கரபாணி, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்.
* பிப்.12 தை 29: ரத சப்தமி, திருப்பதி வெங்கடேசர் ரத சப்தமி உலா, குரங்கணி முத்துமாலையம்மன் திருமாலை உற்ஸவம், திருச்செந்தூர் முருகன் பூங்கோயில் சப்பரம், திருப்போரூர் முருகன் பிரணவ உபதேசம், மதுரை கூடலழகர் கருட சேவை.
* பிப்.13 மாசி 1: கார்த்திகை விரதம், பீஷ்மாஷ்டமி, பீஷ்ம தர்ப்பணம், மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், திருச்செந்தூர் முருகன் தங்க முத்துக்கிடா வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் கருடசேவை, கும்பகோணம் சக்கரபாணி சேஷவாகனம்.
*பிப்.14 மாசி 2: திருச்செந்தூர் முருகன் குடவருவாயில் ஆராதனை, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் மாசி உற்ஸவம் ஆரம்பம், காங்கேயநல்லூர் முருகன் திருக்கல்யாணம், மதுரை கூடலழகர் வெண்ணெய்த்தாழி சேவை, காரமடை ரங்கநாதர் சிம்மவாகனம், திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்.
*பிப்.15 மாசி 3: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், திருச்செந்தூர் முருகன் கோரதம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஆண்டாளுடன் மாலை மாற்றுதல், மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் புறப்பாடு, நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி விருஷப சேவை.