மகா சிவராத்திரி விழா கோலாகலம் : கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2019 10:03
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலில்களிலும் இன்று(மார்.,04) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்கள், இஷ்ட, குல தெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை நாளில் மகா சிவராத்திரி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று மதியம் ஏராளமான கோயில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சிவாராத்திரி விழாவிற்காக வெளியூர்களில் உள்ளோர் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.