பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கள்ளிபாளையம் சக்தி மாரியம்மன், சக்தி காளியம்மன் கோவில் 19ம் ஆண்டு தீ மிதித்தல் திருவிழா நடந்தது. குமாரபாளையம் அருகே, கள்ளிபாளையம் சக்தி மாரியம்மன், சக்தி காளியம்மன் கோவில் 19ம் ஆண்டு தீ மிதித்தல் திருவிழா கடந்த மாதம், 19ல் பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. 26ல், மறு பூச்சாட்டு விழா, கம்பம் நடுதல் விழா நடந்தது. மார்ச், 5ல் சக்தி அழைப்பும், நேற்று (மார்ச்., 6ல்) குண்டம் தீ மிதித்தல் வைபவம் நடந்தது.
இதில், விரதமிருத்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்தனர். ஏற்பாடுகளை, கோவில் தலைவர் காளிமுத்து மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.