அலங்காநல்லுார்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா மார்ச் 18ல் துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மார்ச் 20 வரை ஸ்ரீதேவி, பூதேவியருடன், சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுவார். மார்ச் 21 காலை 11:15 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச் 22 மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது.