திண்டிவனம்: திண்டிவனம் செஞ்சி ரோடு பெலாங்குப்பம் ராகவேந்திரா தியான மண்டபத்தில் ராகவேந்திரா சுவாமிகளின் 424வது ஆண்டு அவதார விழா நேற்று நடந்தது.இதனையொட்டி காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 11:00 மணிக்கு ஆராதனையும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு மங்களார்த்தியும், 2:00 மணிக்கு 2000 பேருக்கு அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு ஸ்வஸ்தி தீபாராதனையும் நடந்தது.திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றிலுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், ஸ்ரீதர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம்விழுப்புரத்தில் ஸ்ரீ அபிநவ மந்த்ராலயா ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், ஸ்தோத்ர பாராயணம் நடந்தது. 7:00 மணிக்கு 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. 8:00 மணிக்கு நிர்மல்ய அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.