பதிவு செய்த நாள்
14
மார்
2019
01:03
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பன்னகாரஹள்ளி கணபதி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 11ல், காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றம், கணபதிஹோமம், லஷ்மிஹோமம், பூர்ணாஹிதி ஹோமம், கங்கணம் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு மேல், கூடம் புறப்படுதல், கணபதி கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பின், காலை, 8:00 மணிக்கு, தீர்த்தம் தெளித்தல், மஹா அபிஷேகம், தீபாராதனை, அலங்கார சர்வ தரிசனம் நடந்தது.\