மயிலம்:மயிலம் மலைக் கோவிலில் நேற்று (மார்ச்., 14ல்) பாலசித்தருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் நேற்று (மார்ச்., 14ல்) திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பாலசித்தருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பங்குனி உத்திர மூன்றாம் நாள் விழாவான நேற்று (மார்ச்., 14ல்) காலை 11:00 மணிக்கு வெள்ளி விமான உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி பூத வாகனத்தில் உற்சவர் மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.