கேசவன் யார் என கேட்டால் விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று என்று சொல்வோம். கேசி என்ற அரக்கனைக் கொன்றதால் கிருஷ்ணனுக்கு ‘கேசவன்’ என பெயர். ஆனால், இதற்கு இப்படியும் ஒரு பொருள் சொல்வர். க, அ, ஈச, வ ஆகிய நான்கு எழுத்தும் சேர்ந்ததே கேசவ என்றாகிறது. அதில் ‘க’ பிரம்மாவையும், ‘அ’ விஷ்ணுவையும், ‘ஈச’ சிவனையும் குறிக்கும். இவர்களே மும்மூர்த்திகள். ‘வ’ என்பதற்கு தன் வசத்தில் வைத்திருப்பவர் என பொருள். மும்மூர்த்திகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேலான பரம்பொருளை ‘கேசவ’ என்பர்.