பழநி:பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை தேரோட்டம் நடக்க உள்ளன.
பழநிமுருகன் கோயில் பங்குனி உத்திரவிழா மார்ச் 15ல் துவங்கியது. தினமும் வெள்ளியானை, ஆட்டுக்கிடா, தங்கமயில் ஆகிய வாகனங்களில் கிரிவீதியில் சுவாமி திருஉலா வருகிறார்.தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். விழாவில் நேற்று (மார்ச் 20ல்) இரவு திருஆவினன்குடி கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4:00மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மாலை 4:30மணிக்கு கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.