ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்குகிறது. நகர வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் நடக்கும்சித்திரை தேர் திருவிழா வரும் ஏப்ரல்17ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்புறம் பந்தல் கால் நடும் விழா நடந்தது. பின்னர் தேர் கட்டும் பணிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து பந்தல் கால்கோள் விழா நடந்தது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பூமாலை கேசவன், வர்த்தக சங்க மாவட்ட துணை தலைவர் ரவி, வர்த்தக சங்க பிரமுகர் பூவராகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.