பதிவு செய்த நாள்
05
மார்
2012
11:03
திருச்சி: வெகு விமரிசையாக நடந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்போற்சவ திருவிழா, நேற்று முன்தினம் சிறப்புடன் நிறைவடைந்தது. "பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறு ம் 10 நாட்கள் தெப்போற்சவ திருவிழா வெகு விமரிசையாக நட ப்பது வழக்கம். இந்தாண்டு கட ந்த ஃபிப்ரவரி 25ம் தேதி தெப்போற்சவ விழா துவங்கியது. தினந்தோறும் உற்சவர் நம்பெருமாள், காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு, பல்வேறு இடங்களில் மண்டகப்படிகளை பெற்றார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தெப்பக்குளத்தெருவில், ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட தெப்பக்குளத்தில் நடந்த தெப்போற்சவத்துக்காக, மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் மதியம் புறப்பட்டார். வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபத் தை அடைந்த நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு சிற ப்பு திருவாராதனங்கள் நடந்தன. இரவு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் திருத்தெப்பத்தில் எழுந்தருளினார். நான்கு கரையில் திரளாக குவிந்திருந்த பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். மூன்றாவது திருவலத்தின்போது, தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு அலங்கார அமுது செய்விக்கப்பட்டது. சுற்றுகளை நிறைவு செய்து, கரை சேர்ந்த உடன், உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைந்தார். தெப்பத்திருவிழாவின் நிறைவுநாளான நேற்று மாலை, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு சிறப்பு திருவாராதனங்கள் செய்யப்பட்டன. ஒற்றை பிரபை வாகனத்தில் பந்தல் காட்சியுடன் ஸேவை சாதித்த நம்பெருமாள், இரவு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். இந்த உற்சவத்துடன் தெப்போற்சவ திருவிழா இனிதே நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.