மாமல்லபுரம் :மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஸ்தலசயனப்பெருமாள்கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றது. இத்தலத்தில் தன்னை காண தவமிருந்த புண்டரீக முனிவருக்காக, இறைவனே கடல்நீரை இறைத்து காட்சியளித்தார். எனவே இப்பகுதி வங்கக்கடல் புனித தீர்த்தமாக விளங்குகிறது. ராமேஸ்வரத்திற்கு இணையாக கருதப்படும் இப்பகுதி கடலில் நீராடி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு பல்வேறு தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சுவாமி கடலில் புனித நீராடும் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. தற்போது வரும் 7ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 8ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.