திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2019 01:04
திருப்புவனம்:திருப்புவனத்தில் பாலகிருஷ்ணபெருமாள் கோயில் 121வது சித்திரை திருவிழா ஏப். 13ம் தேதி சுதர்சன ஹோமத்துடன் தொடங்குகிறது.அன்று காலை 11:00 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.14ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலகிருஷ்ண பெருமாள் தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மண்டகப்படிதாரர்கள் சார்பில் மண்டகப்படியில் எழுந்தருளும் பெருமாள், முனியாண்டி கோயிலில் இரவு தங்குகிறார். மறுநாள் 15ம் தேதி வீரபத்ர சாமி கோயிலுக்கு செல்லும் பெருமாள், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலா வருகிறார். 16ம் தேதி காலை 10 :00 மணிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், யாதவர் பண்பாட்டு கழகம், பாலகிருஷ்ண பெருமாள்கோயில் நிர்வாக குழுவினர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.