பதிவு செய்த நாள்
05
மார்
2012
04:03
கும்பகோணம் கும்பேஸ்வரர் மீது திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை, மாசிமக நாளில் (மார்ச் 7) பாராயணம் செய்தால், மகாமகக்குளத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.
அரவிரி கோடல்நீடல் அணிகாவிரி யாற்றயலே
மரவிரி போது மௌவல் மணமல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன் குடமூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி இருந்தான்அவன் எம்மிறையே.
ஓத்துஅர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்துஅர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்துஅர வங்கள்ஓவாக் குழகன்குட மூக்குஇடமா
ஏத்துஅர வங்கள்செய்ய இருந்தான்அவன்
எம்இறையே.
மயில்பெடை புல்கியால மணல்மேல்
மடஅன்னம் மல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்கள்
விரிப்பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாடல்
உடையாண்குடை மூக்கிடமா
இயலொடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.
மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துஉமை யாள்வெருவ
அக்குஅரவு ஆமை யேன மருப்போடுஅவை
பூண்டழகார்
கொக்கரை யோடுபாடல் உடையான்குட மூக்கிடமா
எக்கரை யாரும்ஏத்த இருந்தான் அவன்
எம்இறையே.
வடிவுடை வாள்தடங்கண் உமையஞ்ச வோர்
வாரணத்தைப்
பொடியணி மேனிமூட உரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடம்ஓங்கும் குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.
கழைவளம் கவ்வை முத்தம் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளம் மாவின்நல்ல பலவின்கனி கள்தங்கும்
குழைவளம் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தான் அவன்
என்இறையே.
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தான்எழில் வையம்உய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புற
மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலம்ஏந்தி இருந்தான்அவன் எம்இறையே.
நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயர்ப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழமவீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தான்அவன் எம்இறையே.
ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பா மதிசூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈருரி கோவணத்தோடு இருந்தான்அவன் எம்இறையே.
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றம்எல்லாம் உடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி இருந்தான்அவன் எம்இறையே.
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு
நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தன் நல்ல
தண்குட மூக்குஅமர்ந்தான் அடிசேர்
தமிழ்பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடுஎளிதே.