புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 01:04
ராஜபாளையம்: புதுப்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று (ஏப்., 10ல்) காலை மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொடி மரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகளும் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் தினமும் பல்லக்கு, கண்ணாடி சப்பரம் என பல்வேறு அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் ரவிராஜா செய்திருந்தார்.