பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
12:04
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கொடியேற்றத் துடன் கோலாகலமாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொண்டை மண்டலத்தில் உள்ள பிரதான சிவாலயங்களில் ஒன்றாக, சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. 450 ஆண்டுகள் பழமை யான இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று காலை, உற்வ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, விசஷே பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து, அஸ்தமானகிரி விமான புறப்பாடு நடந்தது.
இரவு, மாவடி சேவை புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில், 12ம் தேதி அதிகார நந்தி சேவையும், 14ல் வெள்ளி ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. சித்திரை விழாவின் முக்கிய நாளான, 16ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 17ம் தேதி புஷ்ப விமானத்தில், 63 நாயன்மார்களுக்கு, இறைவன் திருக்காட்சி நடக்கிறது. 18ம் தேதி பிச்சாடனார் கோலத்தில், திருவீதி உலா நடக்கிறது.வரும், 19ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 20ம் தேதி புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கிறது. அன்று இரவு, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 21ம் தேதி, உற்சவ சாந்தி, நவ கலச அபிஷேகம் நடக்கிறது.