Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆன்மிகச் சுற்றுலா மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வீடு கட்டும் யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
16:42

பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் அமர்ந்தும் தொடர்ந்து நன்மை தருவார்கள். இந்த மாதத்தை பொறுத்த வரை சுக்கிரன் ஏப்.16 வரையும், செவ்வாய் மே7ல் இருந்தும் நற்பலன் கொடுப்பர். புதன் ஏப்.26லும்,  மே 12லும் இடம் மாறுகிறார். இருப்பினும் அவரால் நன்மை தர முடியாது. தற்போது புதன் உங்கள் ராசிக்கு 12ல் இருப்பது சுமாரான பலன் தரும். ஏப்.26க்கு பிறகு அவரால் குடும்பத்தில் பிரச்னை வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணஇழப்பு ஏற்படலாம். பணியாளர்கள் இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.  

குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மே4,5ல் பெண்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். ஏப். 14,15,16ல் சுக்கிரனால் பண வரவு இருக்கும். மே 12க்கு பிறகு புதனால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.

மே7 முதல் செவ்வாயால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு கட்ட, புதிய மனை, வாகனம் வாங்க யோகம் கை கூடி வரும்.

பணியாளர்களைப் பொறுத்தவரையில், தனியார்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல், வேலை பளு இருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த மதிப்பு, செல்வாக்கு இல்லாமல் போகலாம். வேலையில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அரசு ஊழியர்கள் பணியில் கவனமுடன் இருக்கவும். இருப்பினும் குருபகவானால் உயர்வு காணலாம். ஏப்.26,27,28 ஆகியவை சிறப்பான நாட்களாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு ராகு,குருவால் நல்ல பொருளாதார வளம், தொழில் விருத்தி உண்டாகும். மே1,2,3,6,7ல் சிறு தடைகள் வரலாம். பணவிரயம் ஏற்படலாம். ஆனால் ஏப்.17,18ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். புதனால் கூட்டாளிகளின் வகையில் இருந்த தொல்லை, முயற்சி தடை, இடர்பாடுகள் ஏப்.26க்கு பிறகு மறையும். செவ்வாயால் ஏற்பட்ட அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு மே6க்கு பிறகு மறையும்.

கலைஞர்களுக்கு சுக்கிரனால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு காரிய தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மே7 முதல் நற்பெயர் காண்பர்.  பொருளாதர வளம் பெறுவர். ஏப்.15,16 மே12,13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இருப்பினும் குருவால் பின்னடைவு ற்படாது.பெரும்பாலானோருக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

விவசாயிகளுக்கு  சோளம், மஞ்சள், பழ வகைகள் நல்ல மகசூலைத் தரும். மே6 க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மே8,9ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். செவ்வாயால் மே 7க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.

* நல்ல நாள்: ஏப். 17,18,19,20,21,26,27,28,29,30, மே 4,5,8,9
* கவன நாள்: ஏப்.22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட  எண்: 3,5
* நிறம்:மஞ்சள், நீலம்

* பரிகாரம்:

* செவ்வாயன்று துர்கைக்கு நெய் தீபம்
* புதனன்று ஏழைக்கு பாசிப்பயறு தானம்
* ஞாயிறன்று நீராடியதும் சூரிய தரிசனம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.