Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தாச்சு பதவி உயர்வு கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வீடு கட்டும் யோகம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆன்மிகச் சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2019
16:56

மனதால் கூட தீங்கு எண்ணாத மீன ராசி அன்பர்களே!

மாத முற்பகுதியில் சுக்கிரனும், மாத பிற்பகுதியில் செவ்வாயும் நற்பலன் கொடுப்பார்கள். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு முக்கிய செயலையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும். மார்ச் 20க்கு பிறகு செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.

குடும்பத்தில் சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதிகள் கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். மார்ச்20க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஏப்.3,4,5ல் பெண்களின் ஆதரவால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 30,31ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 15,16, ஏப்.11,12ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஏப்.8க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை, பொருள் இழப்பு ஏற்படலாம்.

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்குரிய மரியாதையும், வருமானமும் கிடைக்கும். பணி விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அல்லது இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். மாத தொடக்கத்தில் நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி பெறுவர். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.

மார்ச் 28,29ல் எதிர்பாராத முன்னேற்ற சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். மார்ச் 20க்கு பிறகு  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர்.

வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லை வரலாம். பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 20க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும்.

கலைஞர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மார்ச் 22க்கு பிறகு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். சனி பகவானால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். மார்ச் 22க்கு பிறகு நற்பலனை எதிர்பார்க்கலாம். பதவியோடு வருமானமும் உயரும்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. மார்ச் 20க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்  சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.    

பெண்கள் குடும்ப வாழ்வில் முன்னேறத்துடன் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மார்ச்20க்கு பிறகு உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. ஏப்.8க்கு பிறகு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.

* நல்ல நாள்: மார்ச் 19, 20, 21, 22, 28, 29, 30, 31 ஏப்.3, 4, 5, 9, 10கவன நாள்: மார்ச் 23, 24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
*  தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு
*  புதனன்று பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள்
*  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.