நத்தம்: நத்தத்தில் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் இந்து வர்த்தகர்கள் பொது நல சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு மாரியம்மன் நகர்வலம் சென்றார்.
நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடந்து காந்தி கலைரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நாதஸ்வர கச்சேரி நடந்தது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் மின் அலங்கார ரதத்தில் பெரியகடை வீதி., தெலுங்கர் தெரு, மார்க்கெட் வீதி, போலீஸ் ஸ்டஷேன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் நகர்வலம் சென்றார். மூன்று லாந்தர் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வரவேற்று தரிசனம் செய்தனர்.