உளுந்தூர்பேட்டை:கிழக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது.ஒன்றுபட்ட கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி, காலை 7.௦௦ மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். தேரோட்டத்தின்போது, பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்தனர்.