அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் நாளை 23ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.அன்னூர், மாரியம்மன் கோவில், 31ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த, 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்றாடம் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
கடந்த, 16ம் தேதி, காப்பு கட்டி கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் பூவோடு எடுத்தனர். 17ம் தேதி காலையில் மகா அபிஷகேம் நடந்தது. 18ம் தேதி இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சி அளித்து அருள்பாலித்தார். இன்று, 22ம் தேதி இரவு அணிக்கூடை எடுக்கப்படுகிறது. 23ம் தேதி காலையில் சக்தி கரகம், அம்மன் அழைப்பு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில், அம்மன் திருவீதிஉலா நடக்கிறது.