பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு, சித்ரா பவுர்ணமி தேர்திருவிழாவை ஒட்டி, கொடியேற்றம், அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனங்களில், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவத்தில் பெருமாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பரிவேட்டை குதிரை வாகன உற்சவமும், நேற்று (ஏப்., 21ல்)சேஷ வாகன உற்சவமும் நடந்தது. இன்று (ஏப்., 22ல்) சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடந்தன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ஜெகதீசன் தலைமையில் செய்திருந்தனர்.