பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
12:04
காடையாம்பட்டி: காடையாம்பட்டி, பொன்னார் கூடல், பெரியமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை, தேர் நிலையை விட்டு புறப்பட்டது. முதல்நாள் கோவிலை சுற்றி, சிறிது தூரத்துக்கு, பத்கர்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நேற்று காலை, சிறப்பு அபிஷேகத்துடன் மூலவர் அம்மன், யோகமுத்ரா அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் நாளாக, தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து அக்னிகரகம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. இன்றிரவு, 10:00 மணிக்கு சத்தாபரணமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா முடியும்.