பதிவு செய்த நாள்
27
ஏப்
2019
12:04
புரிசை : புரிசை வைத்தீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு, கட்டுமானப்பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என, கிராம மக்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் அடுத்த, புரிசை களத்துமேடு பகுதியில், சில தினங்களுக்கு முன், சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதை, வைத்தீஸ்வரர் என, பெயரிட்டு, கோவில் கட்டுமான பணியை, அந்த கிராம மக்கள் துவக்கியுள்ளனர். அம்பாள் சன்னிதியும் எழுப்பப்பட உள்ளனர். இக்கோவில், பல நன்கொடையாளர்களின் உதவியுடன், கட்டுமான பணிகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். கோவில் திருப்பணிக்கு, பணம் மற்றும் கட்டுமானப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நன்கொடையளிக்க விரும்பும் நபர்கள், கோவில் நிர்வாகத்தை அணுகி கட்டுமான பொருட்கள் மற்றும் பண உதவி செய்யலாம் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.