ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா நடந்தது. துவக்கத்தில் திருமஞ்சனக்குடம் அழைத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவில மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் ராமர் ,லட்சுமணர் வேடமணிந்து பொங்கலிட்டு, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாளில் ஆஞ்சநேயர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது.ஆண்டிபட்டி, சுற்றுப்புற கிராம பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.