பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
கோவை:கோவை, உப்பிலிபாளையம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று (மே., 1ல்) பக்தர்கள் பூவோடு, பால் குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, உப்பிலிபாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கணபதி ஹோமம் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.நேற்று (மே.,1ல்) காலை ஆடிஸ் வீதி கருமாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து, கரகம், பூவோடு, பால்குடம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள், பூவோடு, பால் குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பகல் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி வந்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே., 2ல்) மஞ்சள் நீர், நாளை (மே., 3ல்) மஹா அபிஷேகம் நடக்கிறது.