திருப்பூர் புனித சூசையப்பர் தேர்த்திருவிழா பக்தர்கள் பங்கேற்று பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2019 01:05
திருப்பூர்: திருப்பூர், குமார் நகர், புனித சூசையப்பர் சர்ச்சில் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர், குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் சர்ச்சில் தேர்த்திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சர்ச்சில் சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டு பாடல் பலி பூஜைகளும் நடந்தன.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு பாடற்பலி பூஜை மற்றும் ஆராதனை ஆகியன நடந்தன. மாலை, மின் விளக்கு அலங்கரித்த தேரில் புனித சூசையப்பர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.சர்ச் வளாகத்தில் உள்ள புனித அந்தோணியார் கெபி, புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது. அதன் திறப்பு விழா, திருத்தேர் பவனிக்கு முன் நடந்தது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் திறந்து வைத்து ஆராதனை செய்தார். பங்கு குரு பிரான்சிஸ் ரோசாரியோ முன்னிலை வகித்தார்.திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதி பங்கு குருக்கள் பங்கேற்றனர். வரும் 5ம் தேதி தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.