திருமலைக்கு கோடையில் வரும் பக்தர்கள் கவனத்திற்கு...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2019 01:05
திருப்பதி: திருமலை பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடை காலத்தில் கூடுதலாக இருக்கும் என்பதால் 3ஆயிரம்து 500 தன்னார்வலர்களும்,500 ஸ்கவுட் குழுவினரும் பக்தர்களுக்கு உதவ இருக்கின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் அறைகள் சரியான நேரத்திற்கு திறந்துவிடப்படுகிறதா? அங்குள்ளவர்களுக்கு உணவு தண்ணீர் கிடைக்கிறதா? என்பதை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துக்கொண்டே இருப்பர். கோடை காலத்தில் மலைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் அவர்கள் இலவசமாக தங்குவதற்கான அரங்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.