மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில், அமாவாசையை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது எட்டு திசையிலும் மயானத்தில் சூழப்பட்ட இந்த கோவிலில் ராவணனின் மகன் மேகநாதன் பஞ்சபாண்டவர்களும் பூஜித்து வேண்டிய வரங்களைப் பெற்றுள்ளனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது.
இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் சாப பாவ தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர் எனக்கு ஒரு படுக்கவைத்து இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, காலை கோவில் மண்டபத்தில் அம்பாள் இருந்தது செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஜெபங்கள் செய்யப்பட்டது தொடர்ந்து ஒரு மணிக்கு கோவில் தலைமை அதுக்கான தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். யாகத்தில் பாஜக அகில பாரத பொதுச்செயலாளர் முரளிதரராவ் தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விடுமுறை காலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்பாளை தரிசனம் செய்தனர் பக்தர்களின் வசதிக்காக கும்பகோணத்திலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.