பதிவு செய்த நாள்
07
மே
2019
01:05
நாமக்கல்: நாமக்கல், பொன்விழா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதம் நடக்கிறது.
இந்தாண்டு திருவிழா, கடந்த மாதம், 28ல் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, தேரில் கலசம் வைத்தல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, பூக்குழி வெட்டி பூஜை செய்தல், மாவிளக்கு பூஜை, மாலை, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை, 8:30 மணிக்கு தேரில் மாரியம்மன் ரதம் ஏறுதல், மதியம், 2:00 மணிக்கு கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தல், மாலை, 5:00 மணிக்கு ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு முத்து மாரியம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அம்மன் குடி புகுதல், 11:00 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.