சென்னை : தமிழகம் முழுவதும் பல கோவில்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் நடந்து வருகின்றன. சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளும் நடந்தன.
இதே போல, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண யாகம் நடத்தினர்.இதில் 20க்கும் மேற்ப்பட்ட சிவசாரியார்கள் மற்றும் திருக்கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் சிறப்பு வருண பூஜை நடைபெற்றது. யாகத்தின் போது குழல் ஒலி, யாழ் ஒலி மற்றும் மிருதங்கங்கள் வாசிக்கப்பட்டன. 10ம் வகுப்பு மாணவி நிஷா வீணையில் அமிர்தவர்ஷினி ராகம் மற்றும் மேகநங்கை ராகம் வாசித்தார்.