பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
திருப்பூர்:உற்சவமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில், தேர்வீதி களில் திருவீதியுலா செல்ல வாகனங்கள் பொலிவுபடுத்தப் பட்டுள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 18, 19ம் தேதிகளில் நடக்க உள்ளது. வரும், 12ம் தேதி கொடியேற்றத்துடன்,
தேர்த்திருவிழா துவங்குகிறது.தேர்த்திருவிழாவையொட்டி, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சோமாஸ்கந்தர், விநாயகர், விசாலாட்சி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத
சுப்பிரமணியருக்கும்; வீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப் பெருமாளுக்கும், தினமும், திருமஞ்சனம் நடைபெறும்.சிறப்பு அலங்காரத்தில் எருந்தருளும்
உற்சவ மூர்த்திகள், காலை, மாலை என, ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு வாகனங்களில் சென்று, பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். தேர்த்திருவிழா நெருங்குவதால், பாது காப்பாக வைக்கப்பட்ட வாகனங்களை எடுத்து, பொலிவு படுத்தும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அதிகார நந்தி வாகனம், யாழி வாகனம்,
ரிசபவாகனம், அன்னவாகனம், காமதேணு, சிம்மம், குதிரை, கற்ப விருக் ஷம், ராவண கலையாய வாகனம், வெள்ளை யானை வாகனம், பூத வாகனம் மற்றும் பல்லாக்கு ஆகியவை
பொலிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது.வீரராகப்பெருமாள் கோவிலில், ஆதிசேஷ வாகனம், அனுமந்தர் வாகனம், கருடவாகனம், கற்பக விருட்சம், குதிரை வாகனம், வெள்ளை
யானை வாகனங்கள் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.