பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
சென்னை:வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, நேற்று முன்தினம் (மே., 9ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது.
வடபழனி முருகன் கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகம் விழாவும், விடையாற்றி பெருவிழாவும்,
விமரிசையாக நடத்தப்படுகிறது.இந்தாண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, நேற்று முன்தினம் (மே., 9ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (மே.,10ல்) சூரிய, சந்திர பிரபை புறப்பாடும், இன்று (மே.,11ல்) ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.ஐந்தாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 15ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை, 9:00 மணி முதல், 9:50 மணிக்குள், பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.வைகாசி விசாகமான, 10ம் நாள் விழாவில், திருக்கல்யாண உற்சவமும், மயில் வாகன புறப்பாடும் நடக்கிறது.
20ம் தேதி முதல், 29ம் தேதி வரை, விடையாற்றி உற்சவமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, வடபழனி முருகன் கோவில் தக்கார், எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.