சிவகங்கை:சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் மழை வேண்டி வருண ஜப வேள்வி பூஜை நடந்தது.இந்து அறநிலையத்துறை நிர்வாகம் மழை பெய்து, நாடு சுபிட்சம் பெற வேண்டுதல் கோரி ஆலயங்களில் வருண ஜப வேள்வி பூஜை களை நடத்த உத்தரவிட்டது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் அம்மன் சன்னதி முன் வருண ஜெப வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு துர்கா பூஜை, நவக்கிரக பூஜைகள் நடந்தது. வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் கோயில் தெப்பத்தில் புனித நீர் ஊற்றி வேள்வி பூஜைகள் நடத்தினர். வேள்வியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அறநிலைய உதவி கமிஷனர் ராமசாமி, செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.