பொள்ளாச்சி:ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா வில் சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தைகளுக்கு ராமானுஜர் பாசுரங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஜலத்தூர் லட்சுமி நாராயண மூர்த்தி கோவில்களில் ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.