பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜரின் பத்து நாள் திருநட்சத்திர திருவிழா நிறைவடைந்தது.
எம்பெருமானார் தரிசன ஐக்கிய சபா சார்பில், ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா, 10 நாட்களாக நடந்தது. இதில், ராமானுஜர் பல்வேறு அலங்காரங்களில் மங்களகிரி வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, முத்துபந்தல், சேஷ வாகனம், அலங்கார பல்லக்கு, சர்வ பூபால வாகனம், புஷ்ப பல்லக்கு வாகனங்களில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளில், திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், விசேஷ ஆராதனை, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் குதிரை தம்பிரான் பேரில் திருவீதியுலா ஆகியன நடந்தன. விழாவையொட்டி, அன்றாடம் மாலை திருவீதி பஜனை நடந்தன.