பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில், ஒட்டாலம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று (மே., 10ல்)நடந்தது.
கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையத்தில், ஜங்கமர் பிரிவினருக்கு சொந்தமான ஒட்டாலம் மன் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று (மே., 10ல்) அம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.நேற்று முன்தினம் (மே., 9ல்) மாலை, திருவிளக்கு வழிபாடு, தூயநீர் வழிபாடுகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு முளைப்பாரிகை வழிபாடும், இரவு, 7:00 மணிக்கு முதற்கால வேள்வி நடந்தது. நேற்று (மே., 10ல்), காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கி நிறைவடைந்தது. காலை, 9:00 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், அதன்பின் ஒட்டாலம்மனுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு, பிரசாதம் பெற்றனர். பகல், 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.