சென்னை மணப்பாக்கத்தில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 12:05
"நம்மாத்துல பெரியவா" என்ற தலையங்கத்தின் அடிப்படையில் அடுத்த 12 மாதங்களுக்கு பல ஊர்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதிமையுடன் விஜயம் செய்து சங்கராபுரம் ஒரு பரிட்சயம் என்ற நோக்கில் பல சத்சங்கம் நடத்த கி . வெங்கட சுப்ரமணியன், மேனேஜிங் டிரஸ்டியாக உள்ள வைஷ்ணவி டிரஸ்ட்டாலும் அதற்கு பக்க பலமாக இருக்கும் பல ஆன்மீக அன்பர்கள் மற்றும் தசாவதாரம் குழு உறுப்பினரின் உறுதுணையோடு தீர்மானிக்கப்பட்டது .
இதன் படி முதல் சத்சங்க நிகழ்ச்சி ஏப்ரல் 24ம் தேதி நங்கநல்லூரின் தில்லை கங்கா நகரில் தொடங்கி, மிகவும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. மே 10ம் தேதி மாலை மணப்பாக்கம் திரு. ஸ்கந்தமூர்த்தியின் கிரஹத்தில் ஸ்ரீ மஹாபெரியவா பிரதிமைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது.
இதை தொடர்ந்து மே 11ம் தேதி மாலை மடிப்பாக்கம் சத்சங்கம் அமைப்பின் சார்பில் அங்கு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 252வது ஜெயந்தியை முன்னிட்டு "தியாக பிரம்மத்தின் வேத அனுபவம்" என்ற தலைப்பில் ஒரு நாத சமர்ப்பணம் சங்கீத வித்வான் டாக்டர் உமாசங்கர் வழங்கினார்.
இதை தொடர்ந்து மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகிக்கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி வக்கீல் அண்ணா என்று எல்லோரா லும் அன்புடன் ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்ரமணியன் நீண்ட விரிவுரை ஆற்றினர்.
தனது உரையில் அவர் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுகிரஹத்துடன் 108 அக்னிஹோத்ரிகள் மாயவரம் அருகில் வரவிருக்கும் ஸ்ரீ சங்கராபுரம் என்ற ஒரு நூதன வேத கிராமத்தில் தங்கள் கிரஹத்திலிருந்து நித்ய அனுஷ்டானம் செய்தும் , வேத முறைப்படி 200 வித்யார்த்திகளுக்கு அவர்கள் மூலம் கிடைக்கப்போகும் குருகுல முறையிலான வேத அத்யனம் மற்றும் அதனுடன் கூடிய ஸ்ரீ மஹா பெரியவா கோயில், புஷ்கரிணி , நந்தவனம் , தேசிய பசுக்கள் கொண்ட கோசாலை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சங்கீத வித்வான் டாக்டர் பி. உமாசங்கரை வக்கீல் அண்ணா நினைவு பரிசினை வழங்கி கெளரவித்தார்.
நடந்து முடிந்த இந்த சத்சங்கத்தில் பல ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.அடுத்த சத்சங்கம் புதுச்சேரியில் மே 20 மற்றும் 21ம் தேதியில் நடைபெறவுள்ளது.