பதிவு செய்த நாள்
13
மே
2019
01:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர். செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் மகா உற்சவம் மற்றும் 9ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, அனுக்ஜை, கணபதி ஹோமம், செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரக வீதியுலா நடந்தது. 4ம் தேதி அம்மச்சார் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், 5ம் தேதி காலை 1,008 பால் குடம் ஊர்வலம், செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. 7ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. 10ம் தேதி இரவு மழை வேண்டி பெண்கள் 1,008 திருவிளக்கு பூஜை செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா ஹோமம் மற்றும் ஊஞ்சல் சேவை, காலை 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவமும் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழத்தனர்.